11ஆம் வாகுப்பு இயற்பியல் புத்தகத்தின் பின் உள்ள குறு வினாக்கள் & நெடு வினாக்கள் தொகுப்பு
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி
தயாரிக்கப்பட்டது 2020-21
அலகு 1 இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்
II. குறு வினாக்கள்
2. இடமாறு தோற்றமுறையில் சந்திரனின் (Moon) விட்டத்தைநீங்கள் எவ்வாறு அளப்பீர்கள்?
3. முக்கிய
எண்ணுருக்களைகணக்கிடுவதன் விதிகளைத் தருக.
III. நெடு வினாக்கள்
1.
(I) குறைந்த தொலைவை அளப்பதற்கு
பயன்படும் திருகு அளவி மற்றும் வெர்னியர் அளவி பற்றி
விவரி.
(II) நீண்ட தொலைவுகளை அளக்கும் முக்கோண முறை
மற்றும் ரேடார் முறை
பற்றிக் குறிப்பிடுக.
2. பிழைகளின்
வெவ்வேறு வகைகளை
விளக்குக
3. பிழைகளின்
பெருக்கம் பற்றி நீவிர் அறிந்தது
என்ன? கூட்டல்
மற்றும் கழித்தலில்
பிழைகளின் பெருக்கத்தை விவரி.
4. கீழ்கண்டவற்றைப்
பற்றி குறிப்பெழுதுக.
(b)
முழுமைப்படுத்துதல்
(c)
பரிமாணமற்ற அளவுகள்
அலகு 2 இயக்கவியல்
II. சிறு வினாக்கள்:
1. கார்டீசியன்
ஆய அச்சுத்தொகுப்பு என்றால்
என்ன?
4. இரண்டு
வெக்டர்களின் ஸ்கேலர்பெருக்கல்
பற்றி சிறுகுறிப்பு வரைக.
5. இரண்டு
வெக்டர்களின் வெக்டர் பெருக்கல்
பற்றி சிறுகுறிப்பு வரைக.
6. இரண்டு
வெக்டர்கள் ஒன்றுக்கொன்று
செங்குத்தாக உள்ளனவா என எவ்வாறு
கண்டறிவாய்?
8. திசைவேகம்
மற்றும் வேகத்தை வரையறு.
9. முடுக்கம்
- வரையறு.
10.
திசைவேகம் மற்றும் சராசரித் திசைவேகம் இவற்றிக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?
III. நெடு வினாக்கள்
1. வெக்டர் கூடுதலின் முக்கோண விதியை விரிவாக
விளக்கவும்.
2. ஸ்கேலார் மற்றும் வெக்டர் பெருக்கல்களின் பண்புகளை
விவரி.
3. மாறாத முடுக்கம் பெற்ற பொருளின் இயக்கச் சமன்பாடுகளை
வருவிக்கவும்.
4. பின்வரும் பொருட்களின் இயக்கச் சமன்பாடுகளை
வருவிக்கவும்
(அ) செங்குத்தாக கீழே விழும் பொருள்
(ஆ) செங்குத்தாக எறியப்பட்ட பொருள்.
அலகு 3 இயக்க விதிகள்
II குறுவினாக்கள்
1. நிலைமம் விளக்குக. இயக்கத்தில் நிலைமம்.
ஓய்வில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம் ஒவ்வொன்றிற்கும் இரு எடுத்துக்காட்டுகள்
தருக.
2. நியூட்டனின் இரண்டாவது விதியைக் கூறுக
3. ஒரு நியூட்டன் – வரையறு
5. ஒரு பொருளை நகர்த்த அப்பொருளை இழுப்பது
சுலபமா? அல்லதுதள்ளுவதுசுலபமா? தனித்த பொருளின்
விசைப்படம் வரைந்து விளக்குக
6. உராய்வின் பல்வேறு வகைகளை விளக்குக.
உராய்வினைக் குறைப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றைத் தருக.
8. ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு
ஆகியவற்றிற்கான அனுபவ கணிதத் தொடர்பைக் (empirical law) கூறுக
9. நியூட்டன் மூன்றாவது விதியைக் கூறுக.
10. நிலைமக் குறிப்பாயம் என்றால் என்ன?
11. சரி சமமான வளைவுச்சாலையில் கார்ஒன்று
சறுக்குவதற்கான நிபந்தனை என்ன?
III. நெடு வினாக்கள்
3. மெல்லிய கம்பி / நூலினால் இணைக்கப்பட்ட கனப்பொருள்களின்
இயக்கத்தை
(i) செங்குத்து (ii) கிடைமட்ட திசையில் விவரி.
4. உராய்வு எவ்வாறு தோன்றுகிறது என்பதை விவரி.
சாய்தளம் ஒன்றில் உராய்வுக் கோணம், சறுக்குக் கோணத்திற்குச்
சமம் எனக் காட்டுக.
5. நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை
விளக்குக.
8. உருளுதலின் உராய்வினைப் பற்றி சுருக்கமாக
விளக்குக.
9. சறுக்குக் கோணத்தை கண்டறிவதற்கான சோதனையைச்
சுருக்கமாக விவரி.
10. வளைவுச் சாலைகளின் வெளி விளிம்பு உயர்த்தப்பட்டிருப்பதன்
நோக்கம் என்ன? விளக்குக.
11. புவியினை நோக்கி நிலவின் மையநோக்கு முடுக்கத்தைக்
காண்க.
அலகு 4 வேலை, ஆற்றல் மற்றும் திறன்
II குறுவினாக்கள்
4. மீட்சி மற்றும் மீட்சியற்ற மோதலின் சிறப்பியல்புகளை
விளக்குக. 5. பின்வருவனவற்றை வரையறு
(b) திறன்
(d) மீட்சியற்ற மோதலில் இயக்க ஆற்றல் இழப்பு
III. நெடு வினாக்கள்
2. வேலை ஆற்றல் தத்துவத்தைக் கூறி விளக்குக.
அதற்கு ஏதேனும் மூன்று உதாரணகளைக் கூறுக.
4. ஒரு பரிமாண மீட்சி மோதலில் பொருட்களின் திசைவேகத்திற்கான
சமன்பாட்டைத் தருவித்து, அதன் பல்வேறு நேர்வுகளை விவரி.
அலகு 5 துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்
II. குறுவினாக்கள்
1. நிறைமையம் வரையறு.
2. கீழ்கண்ட வடிவியல் அமைப்புகளின் நிறைமையத்தை
காண்க.
(அ) சமபக்க முக்கோணம் (ஆ)உருளை
(இ)சதுரம்
3. திருப்புவிசை வரையறு. அதன் அலகு யாது?
4. திருப்பு விசையை உருவாக்காத விசைகளுக்கான
நிபந்தனை யாது?
5. நடைமுறை வாழ்வில் திருப்பு விசை பயன்படுத்தப்படும்
எடுத்துக் காட்டுகள் ஏதேனும் இரண்டு கூறு.
6. திருப்பு விசைக்கும் கோண உந்தத்திற்கும் இடையேயான
தொடர்பு யாது?
9. இரட்டையின் திருப்புத்திறனை வரையறு.
10. திருப்புத்திறனின் தத்துவத்தை கூறுக.
11. ஈர்ப்பு மையத்தை வரையறு.
15. (அ)நிறை (ஆ) விசை என்ற இயற்பியல்
அளவுகளுக்கு சமமான சுழற்சி இயக்க அளவுகள் யாவை?
III. நெடுவினாக்கள்
2. ஒழுங்கற்ற வடிவமுடைய பொருட்களின் நிறை மையம்
காணும் முறையை விளக்குக.
3. சைக்கிள் ஒட்டுபவர் வளைவுப்பாதையை கடக்க
முயலும் போது சாய்வதற்கான காரணம் என்ன? கொடுக்கப்பட்ட திசை
வேகத்திற்கு சைக்கிள் ஒட்டுபவர் சாயும் கோணத்திற்கான சமன்பாட்டை பெறுக.
4. தண்டு ஒன்றின் நிலைமத்திருப்புத்திறனை அதன்
மையம் வழியாகவும், தண்டிற்கு செங்குத்தாகவும் செல்லும்
அச்சைப் பொருத்ததுமான சமன்பாட்டை விவரி.
10. சாய்தளத்தில் உருளுதலை விவரி மற்றும் அதன்
முடுக்கத்திற்கான சமன்பாட்டை பெறுக.
Prepared by : Kalvithugal.blogspot.com,
M.Venkatesh G.B.H.S.S, Elavanasur, Kallakurichi Dt.
Mobile:
7339252602, Mail : Kalvithugal@gmail.com