Ads Area

தமிழகத்தில் 9 மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை ஆயத்தப்பணிகள் துவக்கம்!!

தமிழகத்தில் மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை ஆயத்தப்பணிகள் துவக்கம்!!  

தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்து கேட்பு கூட்டங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. சேலம், திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களுடன் தொடரில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பள்ளிகளில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த குறிப்பிட்ட வகுப்பறையை மட்டும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் சார்பில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார் . மேலும் முதல்வர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் அமைச்சர் கூறி உள்ளார். இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, அரசின் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் மட்டுமே தற்போது திறக்கப்பட்டு உள்ளன. 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டால் அவர்களை குழுக்களாக பிரித்து பாடங்களை நடத்த போதுமான அளவு ஆசிரியர்கள் உள்ளனரா என உறுதி செய்யப்பட்டு வருகிறது. எமிஸ் இணையதளத்தின் மூலம் பள்ளி வாரியாக உள்ள வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

 


Tags

Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. 10வது 12ம் வகுப்பு மாணவ மாணவிகளை விட அதிகப்படியான பாட சுமை 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தான் அதிகம். 11ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தாங்கள் எடுத்த குரூப்பில் இடம்பெற்றுள்ள பாடங்கள் என்ன என்றே தெரியாத நிலை உள்ளது.
    இது கல்வியாளர்களாகிய தாங்கள் தான் சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா.?

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad

Ads Area